
நம்பி வந்த இளம் இயக்குனரை ஏமாற்றிய – கெளதம் மேனன்!
இயக்கிய முதல் படத்திலேயே ”அடடே. இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா..” என்று திரையுலகத்தையும், ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் ‘துருவங்கள் 16’ பட இயக்குனர் கார்த்திக் நரேன்.
அந்தப் படம் வெற்றி பெற்றதும் கோலிவுட்டின் பிரபலங்களிடமிருந்து பாராட்டுகள் குவிய, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது
ஆனால் தனக்குப் பிடித்த அதாவது ”யாருடைய படங்களைப் பார்த்து வியந்து தானும் இயக்குனராக வேண்டும் என்று நினைத்தாரோ?” அதே கெளதம் மேனன் கம்பெனியிலேயே இரண்டாவது படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தால் அதை சும்மா விட முடியுமா?
உடனே கெளதம் மேனன் தயாரிப்பு நிறுவனத்தில் தனது ‘நரகாசுரன்’ படத்தை இயக்க ஓ.கே சொன்னார் கார்த்திக் நரேன்.
அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா நடிப்பில் தயாராகி வந்த இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீசாகவில்லை. பொறுத்துப் பொறுத்துப் ...