1983-க்குப் பிறகு மீண்டும் இணையும் மைக் மோகன் – சுஹாசினி ஜோடி!
1983-க்குப் பிறகு மீண்டும் இணையும் மைக் மோகன் – சுஹாசினி ஜோடி!
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படத்தில் கணவன் – மனைவியாக நடிக்கும் மைக் மோகன், சுஹாசினி!
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படத்தில், நடிகர் மைக் மோகனும் நடிகை சுஹாசினியும் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் மைக் மோகனும் சுஹாசினியும் கணவன் – மனைவியாக நடிக்க இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 1983-ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தில் கணவன் – மனைவியாக நடித்த மைக் மோகன் – சுஹாசினி ஜோடி, சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே உறவுமுறையில் இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நட...
