லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு!
லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு!
சென்னை:
தமிழ் இசை உலகில் புதுமையான முயற்சியாக, லண்டனின் அழகிய பின்னணியில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. Story Culture நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பாடலை Saregama India Limited நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பாலாஜி திருமால் மற்றும் மதுமிதா இணைந்து நடித்துள்ள இந்தப் பாடலை பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் A.J. இசையமைத்துள்ள இந்தப் பாடலை G.V. பிரகாஷ் மற்றும் சினேகா இணைந்து பாடியுள்ளனர். K.U. கார்த்திக் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
லண்டன் பின்னணியில் உருவான வித்தியாசமான ஆல்பம்
ஒரு காதல் பாடலை வெறும் பாடல் காட்சியாக இல்லாமல், அழகான விஷுவல் அனுபவமாக உருவாக...





