Friday, October 30
Shadow

வாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)


இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள குப்பத்து ராஜா படத்திற்கு பின்னர் வெளியாகியுள்ள படமான வாட்ச்மேன். இவரது நடிப்பில் கடந்த இரண்டு மாதத்தில் வெளியான மூன்றாவது படம் இதுவாகும். இந்த படத்தின்  திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
இந்த படத்தின் மூலம்  கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக முன்னணி காமடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு இந்த படத்தில் தனது காமடியில் கலக்கியுள்ளார். ரவி பிரகாஷ், சாமிநாதன் உளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.
இந்த படத்திற்கு ஜீவி பிராகஷ் தானே இசையமைத்துள்ளார். சினிமாட்டோகிராபி பணிகளை நிரவ் ஷாவும், எடிட்டிங் பணிகளை ஆண்டனியும் செய்துள்ளனர்.
படத்தின் கதை: திரில்லர் படமான வெளியாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் சேல்ஸ்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம்  நடந்த அன்று இரவில் அவர் வாழ்க்கைகே சவாலாக நடக்கும் சம்பவமே படத்தின் கதை
படத்தின் முதல் பாதியில் யோகி பாபு காமடி படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது. இதை தொடர்ந்து, அந்த பேய் பங்களாவுக்கு வருபவர்களை விரட்டுகிறது என்பதை விளக்கும் பிளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்து காட்சிகள் ரசிகர்களை தொடர்ந்து சீட்டிலேயே இருக்க வைக்கிறது.
படத்தின் நாயகன் படத்தில் வரும் நாய் என்று சொன்னால் மிகையாகாது அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக நடித்து இருக்கிறது நாய் நன்றி உள்ளது என்பதுக்கு இந்த படம் ஒரு உதாரணம் என்றும் சொல்லலாம்
சிறப்பு திட்டரத்தில் வரும் சாயிஷா ரசிகர்களை கவனத்தை ஈர்க்கிறார் அதே படத்தின் இசையும் காட்சியமைப்பும் ரசிகர்களை கவர்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா
மொத்தத்தில் இந்த படம் ஒருமுறை பார்க்க கூடிய படமாக இருக்கிறது.