மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா ‘RX’? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!
மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா 'RX'? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!
லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'RX' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் கவனம் பெற்ற இயக்குநர் விஷால் வெங்கட், 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'பாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ளார். நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தலைப்பும், தற்போது வெளியாகியுள்ள போஸ்டர்களும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்வ...
