ஹவுஸ் ஓனர் பற்றி நடிகர் கிஷோர் சொன்ன ரகசியம்
நடிகர் கிஷோர் அவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த சக்தி உள்ளது. ஒவ்வொரு முறையும், அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். பன்முகப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் பாராட்டுக்களை பெறுகிறார். அது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவர் ஒருபோதும் தன் மீது கவனத்தை திருப்புவதை தவறவிடமாட்டார். வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் “ஹவுஸ் ஓனர்” படத்தில் தனது புதிய அவதாரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்தில் அந்தந்த திரைப்பட இயக்குனர்களுடன், கலைஞர்களும் எப்போதுமே மிகுந்த பாராட்டுக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படையானது. ஆனால் நடிகர் கிஷோரின் மேற்கோள்கள் மிகவும் உணர்ச்சிவசமானது. அவர் கூறும்போது, “ஆம், ஹவுஸ் ஓனர் பயணம் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக...