இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமானிடம் கோவம் அடைந்த இளையராஜா
தயாரிப்பாளர் சங்கம் நடத்திய இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தான் எத்தனை எதிர்ப்பு பல சோதனைகள் பாதி தயாரிப்பாளர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கோர்ட் கேஸ் என்று எல்லாம் சென்று ஒரு வழியாக இதை நடிகர் சங்க உறப்பினர்கள் ஒத்துழைப்புடன் வெற்றிகண்டார் விஷால் .
இளையராஜா 75 நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் கலந்து கொண்ட போதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தது தான் சிறப்பு. அதிலும் மேடையில் ராஜா சாரும், ரஹ்மானும் பாடியது ரசிகர்களால் மறக்கவே முடியாது.
விழா மேடையில் இளையராஜா ரஹ்மான் பற்றி பேசியது எல்லாம் இனி பல காலம் பேசப்படும்.
சின்னப் பையனாக பார்த்த ரஹ்மான் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று சுஹாசினி மணிரத்னம் இளையராஜாவிடம் கேட்டார். ரஹ்மான் அவரின் அப்பாவுடன் இருந்ததை விட என்னுடன் தான் அதிக நேரம் இருந்திருக்கிறார் என்றார் இளையராஜா.
அப்பாவை விட என்னுடன் தானே அதிக நேரம் இருந்திருக்க என்று இளையராஜா...