Sunday, April 19
Shadow

Tag: #imai #Sarish #akshypriya #prakashraj #thirumozhi

புதுமுகங்கள் அறிமுகமாகும் ஒரு முரட்டுத்தனமான காதல் கதை ”இமை”

புதுமுகங்கள் அறிமுகமாகும் ஒரு முரட்டுத்தனமான காதல் கதை ”இமை”

Latest News
இது படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் விஜய் கே.மோகன் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் 'நளசரிதம் நாலாம் திவசம் ' ,'வேனல் மரம் 'என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. நாயகனாக சரிஷ் அறிமுகமாகிறார். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன. பிரகாஷ் ராஜின் மைத்துனரும் டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழி வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் விஜய் கே. மோகன் தான் இயக்கும் முதல் படம் பற்றிப் பேசும்போது, "திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற...