
இசையமைப்பாளர் இம்மானின் நூறாவது படத்தின் இசைக்கு நன்றி கூறிய இம்மான்
காதலே சுவாசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் இமான் இன்று அவரின் நூறாவது படத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார் . இன்று பல இசையைப்பளர்கள் நாள் தோறும் வந்தாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இசையமைப்பளார் என்ற பெருமையை தேடி கொண்டவர் காரணம் இவரின் மெட்டுகள் தயாரிப்பாளர்களுக்கு துட்டு என்று தான் சொல்லணும்
ஒரு காலத்தில் இசை தட்டுக்கு என்று ஒரு மார்கெட் இருந்தது அது தயாரிப்பளர்கள் சுமையை குறைக்கும் ஆனால் இன்று இசைக்கு மார்கெட் இல்லை இசை வெளியிட தயாரிப்பாளர்கள் பணம் செலவு செய்யும் காலம் இது ஆனால் தயாரிப்பளர் நலன் கருதி குறைந்த செலவில் நிறைந்த பாடல்கள் கொடுப்பவர் இம்மான் இதனாலே எல்லா தயாரிப்பாளரும் இவரை தேடி ஓடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவரின் இசையில் வரும் பாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைகிறது அதோடு விநியோகிஸ்தர்கள் இவரின் இசை என்றால் நம்...