Monday, April 28
Shadow

புதிய மைல்கல்லை தொட்ட இசையமைப்பாளர் டி.இமான்

சின்னத்திரை சீரியல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இதை தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களுக்கு இசையமைத்து வந்தார். விஜய் நடித்த `தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து `விசில்’, `6’2′ `ரெண்டு’ என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இமான், `மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார்.

`மைனா’ படத்திற்கு பின்னர் அவரது இசையில் வெளியான பெரும்பாலான படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இமான் 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்’ படம் தான் இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்ட இமானுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Leave a Reply