
இந்தியன் 2-லும் இரட்டை வேடத்தில் கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இணைந்து பணியாற்ற உள்ள இந்தியன் 2 படம் இந்தாண்டு இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த்து. தற்போது இந்த படத்திற்கான பிரி-புரோடைக்கஷன் பணிகள் நடந்த வரும் நிலையில், புதிய தகவல் ஒன்று இன்டர்நெட்டில் பரவி வருகிறது.
அந்த தகவலில், இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த 1996ல் வெளியான இந்தியன் படத்திலும் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடத்தது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போராட்ட தியாகி சேனாதிபதி, ஊழல் அதிகாரியாக மகன் சந்துரு என இரண்டு கேரக்டர்கில் நடித்திருந்தார். இதே போன்று இந்தியன் 2 படமும் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாகவே இருக்கும் என்று தெரிகிறது....