மாஸ் ஹீரோவிலிருந்து மனதைத் தொடும் தந்தையாக… ரவி தேஜாவின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் ‘இருமுடி கட்டு’!
மாஸ் ஹீரோவிலிருந்து மனதைத் தொடும் தந்தையாக... ரவி தேஜாவின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் ‘இருமுடி கட்டு’!
தென்னிந்திய சினிமாவில் தனது மாஸ் கதாபாத்திரங்களாலும் அதிரடி நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள ரவி தேஜா, தற்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக மாஸ் காட்சிகள், அதிரடி வசனங்கள் மற்றும் விறுவிறுப்பான கதைகளில் காணப்படும் ரவி தேஜா, இந்த முறை அப்பா–மகள் உறவின் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக தனது மகளின் ஆசைக்காக வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் பயணத்த...
