விஜய்யுடன் மோதுகிறார் எஸ் ஜே சூர்யா
எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அவதாரத்தை எடுத்த இவர் கொஞ்ச நாளில் நாயகன் என்றார் பின்னர் இசையமைப்பாளர் என்று பல பரிமாணங்களை கொடுத்தவர் கடைசியாக இவர் இயக்கிய இசை படம் பெரும் தோல்வியடைந்தது நாம் அறிந்த விஷயமே இந்த தோல்வியால் இனி கொஞ்ச நாளுக்கு இயக்கம் வேண்டாம் என்று நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு எற்ப போல நல்ல கதாபாத்திரம் கிடைத்து வருகிறது இறைவி அடுத்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நாயகனாகவும் அதே போல தெலுங்கி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அது மட்டும் இல்லை ந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் இதை அடுத்து இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 61 படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார்.
விஜய் 61 படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக...
