Thursday, January 16
Shadow

Tag: #jallikattu #sivakarthikeyan

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு சிவகார்த்திகேயன் நேரில் ஆதரவு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு சிவகார்த்திகேயன் நேரில் ஆதரவு!

Latest News
ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் ஆதி, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இயக்குனர்கள் அமீர், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் ஆரி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் களத்தில் இறங்கியும் இன்னும் சில திரை பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் இதுவரை சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களுக்கு ஆதரவு அளித்துவந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவை வழங்கியுள்ளார்...