
ஜெயலலிதா வாழ்கை வரலாறை படமாக்க போகும் பாரதிராஜா
திரைப்பட நடிகையாக, அரசியல்வாதியாக பல சாதனைகளைப் புரிந்த ஜெயலலிதாவிற்கு, அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் என்ற பெயரில் புதிய சோதனை ஒன்று காத்திருக்கிறது. மூன்று பேர் இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் விஜய், அறிமுக இயக்குனர் பிரியதர்ஷினி ஆகிய மூவர் தான் அந்தப் படங்களை இயக்கப் போகிறவர்கள். ஒரே சமயத்தில் எந்த ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமும் இப்படி போட்டி போட்டு தயாரிக்கப்பட்டதில்லை. ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இப்படி போட்டி போட்டு எடுப்பதால் தேவையற்ற குழப்பங்கள் தான் வரும்.
ஒரே சமயத்தில் மூன்று படங்கள் என்பதால் ஜெயலலிதா கதாபாத்திரங்களில் நடிக்கப் போவது யார் யார் என்பதுதான் அடுத்த கேள்வியாக எழும். தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிகைகள் ய...