‘செண்பகக் கோட்டை’- திரைவிமர்சனம் Rank 5/3
காட்டுவழியாக செல்லும் அரசர் வேடர் குலத்தை சேர்ந்த பெண்ணை பார்த்தவுடன் காதல்வயப்படுகிறார். அந்த பெண்ணின் தந்தையிடம் பேசி அவளை திருமணமும் செய்துகொள்கிறார். பின்னர் அவளுக்காக அந்த காட்டுக்குள்ளேயே செண்பக கோட்டை ஒன்றை கட்டிக் கொடுத்து, அவளை அதற்கு அரசியாக முடிசூட்டி விட்டு தனது நாட்டுக்கு திரும்புகிறார்.
இவர் சென்ற நேரம், எதிரிகள் இவரது நாட்டை சூழ்ந்துவிடுகின்றனர். இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றன சூழ்நிலை உருவாகிறது. இதனால், உயிரை காப்பாற்றிக் கொள்ள செண்பக கோட்டைக்கு வருகிறார். செண்பக கோட்டையில் அரசியாக இருக்கும் வேடர் குலத்து பெண், அரசனின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டு, பேயாக மாறி அந்த கோட்டையையும் மன்னனையும் காப்பாற்றி வருகிறாள்.
பின்னர், பல நூறு வருடங்களுக்கு பிறகு கதை நகர்கிறது. செண்பகக் கோட்டையில் வசித்து வந்த அனைவரும் இறந்துபோக அந்த கோட்டையே பாழடைந்து ப...