பிரபல மலையாள இயக்குனருடன் இணையும் கார்த்தி
பாண்டிராஜ் இயக்கத்த்தில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' சூப்பர் ஹிட்டானது. சின்னபாபு என்ற பெயரில் வெளியாகி தெலுங்கிலும் இப்படம் பெரும் வெற்றியை குவித்தது.
விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்பட பல்வேறு தரப்பினரும் இப்படத்தை பாராட்டினர். இதனால் கார்த்தியின் அடுத்தப்படம் குறித்த எதிர்பாப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜத் ரவிஷங்கர் இயக்கும் ‘தேவ்' படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு தேவ் படத்தின் படப்பிடிப்புக்காக மணாலி சென்ற கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கினர். அதில் இருந்து மீண்டு வந்த படக்குழுவினர், வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருக...