
என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது ஹிந்தியில் கால் பதிக்கிறேன் ஜீவா
இளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா.எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி , கலகலப்பு 2 என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது....
அவரது முதல் ஹிந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்.இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா நிச்சயமாக 2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது.
சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது... அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்...அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்....இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்... இப்போ சூப்பர்குட் ப...