ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கு ஜிப்சி படத்துக்கு இமாச்சல பிரதேஷ் அழகி நடாஷா சிங்
'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன், 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக நடிக்க ஜீவா ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மிஸ் இந்தியா இறுதி போட்டியாளரும் மிஸ் இமாச்சல பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மாடலிங் துறையில் புகழ்பெற்ற இவர், பாலிவுட்டில் விளம்பர படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் மற்ற கலைஞர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜீவாவின் நடிப்பில் 'கீ', 'கொரில்லா' முதலிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது....