
றெக்க புகழ் ரத்தினா சிவா இயக்கத்தில் ஜீவாக்கு ஜோடியாகும் ரியா சுமன்
றெக்க புகழ் ரத்தினா சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது, விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் உறுதி செய்திருந்தனர். தற்போது நாயகியாக தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான மற்றும் அழகான ரியா சுமன் ஜீவாவுக்கு நாயகியாக நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கில் மஜ்னு மற்றும் பேப்பர் பாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நாயகி ரியா சுமன் பேசும்போது, "தமிழில் என் முதல் படம் என்பதையும் தாண்டி, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தெலுங்கு திரைப்படங்களில் நான் இதுவரை செய்த கதாபாத்திரங்கள் சற்றே தீவிரமான கதாபாத்திரங்கள். ஆனால் இந்த படத்தில் எனக்கு மிகவும் துடிப்பான கதாபாத்திரம்" என்றார்.
...