2 தேசிய விருது வென்ற “ஜோக்கர்” பட குழு ரசிகர்களுக்கு நன்றி
2 தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் படக்குழு கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் ராஜு முருகன் , நாயகன் சோம சுந்தரம் , இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசியது , நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் , இப்படம் அனைவரின் ஒத்துழைப்பில் திரையரங்குக்கு வந்ததே மிகப்பெரிய வெற்றி. ஜோக்கர் திரைப்படம் இங்கு இருக்கும் அனைவரும் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக பேச வழிவகுத்து தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பாலிவுட் நடிகர் நாவசுதின் சித்திக் போன்ற மிக சிறந்த நடிகர் என்றார் இயக்குநர் ராஜு முருகன்.
நடிகர் குரு சோம சுந்தரம் பேசியது :- ஜோக்கரில் நர்ஸ் வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் என்னை கைபேசியில் அழைத்து வாழ்த்து ...