படப்பிடிப்புக்கு குட்பை சொன்ன ‘காகங்கள்’… யோகி பாபு பிறந்தநாளில் படக்குழு கொண்டாடிய மறக்க முடியாத தருணம்!
படப்பிடிப்புக்கு குட்பை சொன்ன ‘காகங்கள்’... யோகி பாபு பிறந்தநாளில் படக்குழு கொண்டாடிய மறக்க முடியாத தருணம்!
சென்னை:
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காகங்கள்' திரைப்படம் தனது படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இறுதிக்கட்ட காட்சிகள் நிறைவடைந்த நாளே நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளாக அமைந்ததால், படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டம் நடைபெற்றது.
படக்குழுவினர் கேக் வெட்டி யோகி பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், படப்பிடிப்பு நிறைவையும் ஒன்றாகக் கொண்டாடி அந்த தருணத்தை நினைவுகூர்ந்தனர். படத்தின் முக்கிய கட்டம் நிறைவடைந்ததால், ஒட்டுமொத்த குழுவினரிடமும் உற்சாகமான சூழல் நிலவியது.
'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை' போன்ற கவனிக்கத்தக்க படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றிய ஆனந்த் அண்ணாமலை, இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப...
