ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்-நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து மிடுக்காக நடந்து சென்று மக்களிடம் குறைகள் கேட்பது போன்றும், மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து குறுகலான தெருக்களில் பயணித்து தமிழர்களுக்கு உதவுவது போன்றும் காட்சிகளை படமாக்குகின்றனர்.
கதாநாயகியாக வரும் இந்தி நடிகை ஹூமா குரேஷி முஸ்லிம் பெண்ணாக ஷெரினா என்ற பெயரில் நடிக்கிறார். படப்பிடிப்பை பலர் செல்போனில் படம் பிடித்து இணையதளங்களில் பரப்பி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்த அறிமுக பாடலையும் பதிவு செய்து வெளியிட்டு விட்டனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு
இதனால் படப்பிடிப்பை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை நிறுத்தி...
