
காதலர் தினத்தில் வந்த ‘காத்து வாக்குல ஒரு காதல் ‘ பட டீஸர் : பிபலங்கள் பாராட்டு !
இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.
காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் 'காத்து வாக்குல ஒரு காதல்'.
சீரடி சாய்பாபா வழங்கும் எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி .நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார். மற்றும் தெறி வில்லன் சாய்தீனா ,கல்லூரி வினோத் ,ஆதித்யா கதிர் ,லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலர...