
குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வேதாளம் புகழ், கபீர் சிங்.
வில்லன் நடிகரான கபீர் சிங், கிறிஸ்துமஸ் திருநாளை நேற்று குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடினார்.
வேதாளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான வில்லன் நடிகர் கபீர் சிங். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், தற்போது தமிழில் ராகவா லாரண்ஸ் நடிக்கும் காஞ்சனா - 3 படத்திலும், சாய் தன்ஷிகா நடிக்கும் ஆக்ஷன் திரில்லரான யோகி டா படத்திலும் நடித்து வருகிறார். யோகி டா படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் திருநாளை கோயம்புத்தூர் அருகில் இருக்கும் ஒண்டிபுதூர் கிங்க்ஸ் கிட்ஸ் ஹோமில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அக்குழந்தைகளுக்கு தேவையான பரிசு பொருள்களையும் வழங்கியுள்ளார்....