
நடிகை காஜல் அகர்வாலுக்கு பொது நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்த பிரபல ஒளிப்பதிவாளர்
சமீபகாலமாக இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான விஷயம் என்றால் அது மீ டூ விவகராம் தான் இந்த சூழ்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பொது மேடையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தார் இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பரவியது.
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் திங்களன்று 'கவச்சம்' தெலுங்குத் திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு, மேடையிலேயே காஜல் அகர்வாலை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
ஒரு பொது மேடை நிகழ்வில் அவர் அப்படி நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் இசையமைப்பாளர் தமனிடம் சவால் விட்டு முத்தம் கொடுத்தார் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சோட்டா கே நாயுடு விளக்கம் கொடுத்துள்ளார்.
“அவர் மீதுள்ள ஈர்ப்பில் அ...