Wednesday, March 26
Shadow

Tag: #Kalavani2

ஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2.

ஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2.

Latest News, Top Highlights
களவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, சாதனை புரிந்த "அலுங்குறேன் குலுங்குறேன்" பாடலை எழுதிய மணி அமுதவன் இந்த பாடலை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம...
இதை யாரும் நம்பாதீர்கள் – ஓவியா

இதை யாரும் நம்பாதீர்கள் – ஓவியா

Latest News, Top Highlights
ஓவியா தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ , விமலுடன் ‘களவாணி-2’, சிம்பு இசை அமைக்கும் ‘90எம்.எல்’ படங்களில் நடித்து வருகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ‘மார்க்கெட்’ சூடு பிடித்திருக்கும் நிலையில் ஓவியா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபற்றி கூறிய அவர்.... “என்னைப்பற்றி யாரோ தவறான செய்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறுவது தவறான தகவல். நான் எந்த தயாரிப்பாளரிடமும் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று சொல்வதே இல்லை. ‘களவாணி-2’ படத்தில் நடிக்க நான் அதிக சம்பளம் கேட்டதாகவும், இதனால் வேறு நடிகையை அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் வதந்தியை பரப்பிவிட்டார்கள். ஆனால், இப்போது அந்த படத்தில் நான் தான் நடிக்கிறேன். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் நிறைய வெ...
‘களவாணி 2’ தலைப்புக்கு போட்டி போடும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்

‘களவாணி 2’ தலைப்புக்கு போட்டி போடும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
2010-ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'களவாணி'. நசீர் தயாரித்திருந்த இப்படத்தில் விமல், ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சற்குணம் இயக்கி, தயாரிக்க மீண்டும் விமல், ஓவியா நடிக்க 'K 2' என்று தலைப்பில் படமொன்று தயாராகி வருகிறது. இதன் தலைப்பை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மாதவனை நாயகனாக வைத்து விரைவில் துவங்கவுள்ள படத்திற்கு முன்பாக, இப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் சற்குணம். இப்படத்தை பலரும் 'களவாணி 2' என்றே குறிப்பிட்டு, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், 'களவாணி' தயாரிப்பாளரான நசீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'களவாணி 2' படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ப...
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

Latest News, Top Highlights
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த "எத்தன்" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது. தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க "களவாணி 2" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தய...