நடன இயக்குனர் கல்யான் மீதான பொய்யான பாலியல் புகார் என்று நிரூபிக்கப்பட்டது
கல்யாண் மாஸ்டர் இலங்கை தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது.
பிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சினிமா ஆசையை விட்டுவிட்டு தனது சொந்த நாடான இலங்கைக்கே சென்றுவிட்டதாக பெண் ஒருவர் தெரிவித்ததை ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சின்மயி.தற்போது அந்த தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது.
சின்மயியின் ட்வீட்டுகளால் என்ன நடக்கிறது என்பதை பார்க்க காரணமே இல்லாமல் கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்தது நான் தான். உங்களின் பெயரை பயன்படுத்தியதற்காக சாரி என்று ஒருவர் ட்வீட்டியதை கல்யாண் ரீட்வீட் செய்துள்ளார்.
தனக்கு வரும் மெசேஜ்களை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே போஸ்ட் செய்கிறார் சின்மயி. அதனால் அவரின் ஆதாரமற்ற ட்வீட்டுகளை நம்ப வேண்டாம். ஆண்களை அசிங்கப்படுத்த பெண்ணியவாதிகள் இந்த மீ டூ டிரெண்டை பயன்படுத்துகிறார்கள் என்று க...
