
நான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகத்தான் இருக்கும் என நடிகர் கமல்ஹாசன்
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில், படிப்பை முடித்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான். ஆகவே மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களை அரசியல்வாதியாக இருக்க சொல்லவில்லை, அரசியல் புரிதல் இருக்க வேண்டும். என்னை கல்லூரி, பள்ளி விழாக்களுக்கு செல்லவிடாமல் தடுக்கின்றனர். போருக்கு செல்பவர்களுக்கு பதற்றமும் பயமும் இருக்காது.
மக்கள் நீதி மையத்தில் பொன்னாடைகள், பூமாலைகள், காலில் விழுவதை தவிர்க்கிறோம். இது எங்களிடம் நடக்காது. நாட்டை மாற்றும் பொறுப்பு, நம்முடைய கையில் உள்ளது.நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது. திராவிடம் என்பது நாடு ...