
ரஜினிகாந்த் ஒரு கன்னடர் கமல்ஹாசன் விமர்சனம்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்ததை கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுபற்றி கமல் இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்விட் செய்தார்.
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? இவ்வாறு கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக ஆங்கிலத்தில் மற்றொரு டுவிட்டில் கன்னடத்துக்காரர் என்பதாலேயே தான் துணை வேந்தரை எதிர்க்கவில்லை என்று விளக்கம் கொடுத்து ஒரு டுவிட்டை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் இனிமேல் கமல்ஹாசன் படங்களை திரையிட அனுமதிக்க கூடாது என ந...