
கமல்ஹாசன் வாழ்த்து ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீமான் ஏன் விளக்கம்
கமல்ஹாசனை ஏன் நான் சந்தித்தேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நடிகர் கமல்ஹாசனை சீமான் இன்று சந்தித்தார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் மிக மோசமான சூழ்நிலைக்கு ஆட்சி போய்க்கொண்டுள்ளது. எப்படியாவது ஒரு மாற்றம் ஏற்பட்டுவிடாதா என்று நினைத்து எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். இந்த மண்ணின் மக்களால் நேசிக்கப்படும் அண்ணன், கமல்ஹாசனும் 21ம் தேதி கட்சி துவங்குவதாக அறிவித்தார்.
நான் நேசித்து வளர்ந்த ஒரு கலைஞர் என்பதால் அவர் என்னை வந்து பார்ப்பது சரியாக இருக்காது என்பதால் நாங்கள் தேடி வந்தோம். அவர் பயணம் புரட்சிகர, வெற்றிகர அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பது வாழ்த்து. ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம், என்றார்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களே, கமலை வாழ்த்துகிறீர்களே என்ற ...