
வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?. ஆண்டவரா இல்லை அருணாசலமா?
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதே போல் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்துள்ளதால் வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் குறித்து பேசிய போதெல்லாம் தமிழகத்தில் ஜெயலலிதா இல்லாத நிலை, கருணாநிதி செயல்படாத நிலை ஆகியவற்றாலேயே இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று பேசப்பட்டது.
இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் கடந்த மாதம் கட்சி ஆரம்பித்தார். இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிகாந்த் நேற்று மாலை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் விழாவில் கலந்து கொண்டார் அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதால் வருகிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். ஆமாயா வெற்றிடம் இருக்கிறது. அதனால் வருகிறேன் என்றார்.
கமலும், ரஜினியும் நண்பர்கள் என்றாலும் இருவரது அரசியலும் வெவ்வேறு திசையில் பயண...