
தமிழ் சினிமாவில் பல ஹீரோகளுக்கு இருக்கும் ஒரு கனவு தமிழக அரசியல் இன்றய சூப்பர்ஸ்டார்க்கு ஆசை ஆனால் பயம் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று சொன்னதோடு சரி ஆனால் இந்த நாள் வரை அதை பற்றி யோசிக்க கூட அவருக்கு பயம் அதற்கு காரணம் அவரின் சுயநலம் மட்டுமே இப்ப இருக்கும் செல்வாக்கு அரசியலுக்கு வந்தால் ஒரு வேலை கிடைக்காது என்ற பயம் தான் அதுநாள் தான் வசனங்கள் பேசியதோடு நிறுத்தி கொண்டார். ஆனால் ஆரம்பத்தில் இருந்து எனக்கும் அரசியலுக்கும் சமந்தம் இல்லை எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொல்லி வந்த கமல்ஹாசன் நிலை இன்று மாறுபட்டுள்ளது.
இன்றைய அரசியல் நிலைமையை பார்த்து மக்களுக்கு ஏற்படும் அவல நிலையை பார்த்து கொத்தித்து மக்களுகாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கமல்ஹாசன் தற்போது அதன் உச்சத்துக்கு வந்துள்ளார் என்று தான் சொல்லணும்.
கமல் சமீபகாலமாக அரசியல் விஷயங்களில் அதிகமாகவே அக்கறை செலுத்துகிறார். காரணம் மாணவர்கள் நாட்டைக் கையில் எடுத்து விட்டார்கள்.
இனி மிரட்டல் அரசியல் மக்களிடம் எடுபடாது. ஜெ., போன்ற சர்வாதிகாரிகள் இனி தோன்ற முடியாது. அப்படி வந்தால் எம் மாணவன் வீதிக்கு வந்து அவர்களை விரட்டுவான்.
சு.சாமிகள் இனி அறிக்கை,டுவிட்டரில் மட்டுமே போராடும் கிழங்கள். நாங்கள் உங்கள் பேரங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் ஜெயில் ஆட்சி, பண ஆட்சி எங்களுக்கு தேவை இல்லை. தேர்தல் நடத்து. அதில் நாங்கள் எங்கள் ஆட்சியை அமைத்துக் கொள்வோம். மாணவன் ஆள்வான். ஒருவேளை தேர்தல் நடத்த தவறினால் நான் வீதிக்கு வருவேன்.
ஆனால், தனியாக வரமாட்டேன். இப்படி ஒரு போடு போட, பிஜேபி தலைமை ஆடிப் போய்விட்டது. தமிழிசை உடனே பதிலடி கொடுத்தார். பன்னீர் வரவேற்றுள்ளார்.
