![டி.ஆருக்கு கமல் கொடுத்த பதிலடி](https://www.cinemapluz.com/wp-content/uploads/2018/03/kamal-haasan3114-1520244608.jpg)
டி.ஆருக்கு கமல் கொடுத்த பதிலடி
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், திருச்சி மாநாட்டிற்காக ரயிலில் பயணம் செய்தார். கமல், சுயவிளம்பரத்திற்காக ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார், ஷகிலா கட்சி ஆரம்பித்தால் கூட கூட்டம் கூடும் என விமர்சித்து இருந்தார் டி.ராஜேந்தர். இதற்கு கமல் பதிலடி கொடுத்திருக்கிறார்.
நான் ரயிலில் பயணம் செய்வதில்லை என எனது நண்பர் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஓசையில்லாமல் ரயிலில் பயணம் செய்கிறேன். திருச்சி மாநாட்டிற்கு 48 பேருடன் சென்றேன்.
காரில் சென்றால் அணிவகுப்பு போல் இருக்கும், போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும். இதுபோன்ற இடையூறுகளை தவிர்க்கவும், பணத்தை வீணாக்காமல் இருக்கவுமே ரயில் பயணத்தை தேர்வு செய்தேன் என கூறியிருக்கிறார் கமல்....