
சுப்பிரமணி சாமியை வறுத்து எடுத்த கமல்ஹாசன்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பம் முதலே தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார் கமல்ஹாசன். இம்மாதம் 13ம் தேதி நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நடந்த விகடன் விருதுகள் விழாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமி, தொடர்ந்து தமிழர்களை, ட்விட்டரில் ‘பொறுக்கிஸ்’ என்று விளித்து வருகிறார். தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க (SICA) தமிழ் இணையதள துவக்க விழாவில் பேசும்போது கமல் இதை நேரடியாகவே குறிப்பிட்டிருந்தார்.
“ யாரோ தமிழ்ப் பொறுக்கிகள்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லில பொறுக்க மாட்டேன். என்ன திடீர்னு அரசியல் பேசறேன்னு நெனைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய மெரினா போலீஸ் தடியடி, வன்முறை கமல்ஹாசனை மிகவும் பாதித்துள்ளது. வன்முறை வெடித்...