திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் தான் “கண்மணி பாப்பா”
நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம்.
கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரி...
