ஒரு நல்ல திரைப்படத்தின் அடையாளம் தான் கண்ணே கலைமானே
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
"நான் சீனு ராமசாமி சாரின் முதல் படத்திலிருந்தே அவரின் ஒரு பெரிய ரசிகன். அவரது திரைப்படங்கள் எப்போதுமே பிரமிப்பூட்டுகின்றன. மிக யதார்த்தமான சினிமாக்களை கொடுப்பதும், அதன் மூலமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு சில இயக்குனர்களே உள்ளனர். அவர்களில் சீனு ராமசாமி சார் மிக முக்கியமானவர்" என்றார் நடிகர், எழுத்தாளர் ஷாஜி.
"இன்று காலை படத்தை பார்த்த பிறகு, கமலகண்ணனி...