சின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.
அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது...யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T.சித்திரைச்செல்வி , M.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ...