நடிகை கரிஷ்மா கபூர் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்
தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர். கபூர், குறிப்பாக அவரது பெண்ணை மையப்படுத்திய படங்களுக்காக அறியப்பட்டவர். இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
கபூர் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் ரந்தீர் கபூரின் மகளான கரிஷ்மா கபூர் தனது 17வது வயதிலேயே நடிக்க வந்தார். “ஜிகார், அனாரி, ராஜா பாபு, கூலி நம்பர் 1, ராஜா ஹிந்துஸ்தானி,” போன்ற பல படங்களில் நடித்தார். ஹீரோயினாக உச்சத்தில் இருக்கும் போதே, 2003ம் ஆண்டு தொழிலதிபரான சஞ்சய் கபூர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகளுக்குத் தாயானார். பின்னர் அவரது கணவரை விவகாரத்து செய்தார். கரிஷ்மா மீண்டும் திரைப்படங்களிலும், டிவிக்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார்....
