கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி – நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி
கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் பலியானார்
ஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்
கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது
இதில் பலத்த காயம் அடைந்த நான்குபேரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்
ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்
திரளான மாவட்ட நிர்வாகிகளும் ரசிகர்களும் கலந்து இறுதிச்சடங்கில் கொண்டனர்
ஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரில் சென்று இறுதிச்சடங்கில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்,...