சூப்பர்ஸ்டாருடன் மோதும் கார்த்தி?
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான காற்று வெளியிடை ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கார்த்தி தற்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை படத்திற்கு போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
பெரும்பாலும் ராஜஸ்தானிலே படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில், சத்யன்சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரப...