
நமது நெல்லை காப்போம் நெல் இரா.ஜெயராமன் கடும் புற்றுநோய் தாக்குதலால் உயிர் காக்க போராடி வருகிறார்.
திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழிதோன்றலாய் இயற்கை விவசாய பன்னையை உருவாக்கி யானைக்கவுனி , கருங்குருனை, உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பறியநெல் வகைகளை கண்டறிந்து அதனை தனது பன்னையில் விளைவித்து வந்தார்.
ஆண்டுக்கொரு முறை தனது ஆதி திரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்க்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வையும், ஏற்படுத்தி வந்தார்.
.
நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பறிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி,அதனை பெற்று செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் விதைத்து இயற்க்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண...