
ரஜினிகாந்த் மற்றும் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல வில்லன்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தில், மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்தது. விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் பாசில், இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ரஜினியின் நண்பராக பஹத் நடிப்பதாகக் கூறப்பட்டது.
சமீபகாலமாக ரஜினியின் படங்களில் அவருடனேயே வரும் நண்பன் கதாபாத்திரம் ஒன்று தவறாமல் இடம்பெற்று வருகிறது. கபாலி படத்தில...