
“கருப்பன்” – திரைவிமர்சனம் ( நண்பன்) ரசிக்கலாம் Rank 3.5/5
நீண்ட இடைவெளிக்கு பின் மிக சிறந்த கிராமத்து வாசம் என்பதை விட ஒரு வாழ்கையை வாழ்ந்தோம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக சிறப்பான ஒரு கதை அதில் வரும் கதாபாத்திரம் பாடல்கள் வசனங்கள் எல்லாமே மண் வாசம் என்று தான் சொல்லணும் மதுரை என்றாலே கத்தி கம்பு அருவா என்று இல்லாமல் ஒரு கணவன் மனைவி உறவுகுள் இருக்கும் பரஸ்பரம் மிக அழகா சொல்லி இருக்கும் படம் தான் கருப்பன்.
மீசை மாடு இதெல்லாம் பார்த்தவுடன் இது ஒரு சண்டை படம் இல்லை காளையை அடக்கும் ஒரு பந்தய படம் இல்லை முழுக்க முழுக்க உறவுகளின் பாசபோரட்டம் தான் இந்த கருப்பன்.
இந்த படத்தில் விஜய்செதுபதி, தன்யா,பசுபதி, காவேரி, பாபிசிம்ஹா, சிங்கம்புலி,சரத் லோகிதாச,ரேணுகா, தவசி,லிங்கா,ஆறு பாலா மட்டும் பலர் நடிப்பில் இம்மானின் ரம்யமான இசையில் சக்திவேல் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவில் ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும்...