Saturday, January 17
Shadow

Tag: #kbalachander #vairamuthu #90thbirthday

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து!

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான். வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எ...