
தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தட்டி பறித்த கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கில் 60, 70களில் சூப்பர் ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் சாவித்ரி. 80, 90களில் நடிக்க வந்த பெரும்பாலான நடிகைகள் தாங்கள் சாவித்ரிபோல் நடிக்க விரும்புவதாகவும், அவர்தான் ரோல் மாடல் எனவும் கூறியிருக்கின்றனர். சினிமாவில் பிரபலமாக இருந்த சாவித்ரியின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. கடைசி காலத்தில் அவர் உடல்நலமில்லாமல் மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். சினிமாவாக உருவாக்குவதற்கான அனைத்து தகுதியும் அவரது வாழ்க்கை பின்னணி அமைந்திருந்தது.
இயக்குனர் நாக் அஸ்வின் என்பவர் சாவித்ரி வாழ்க்கையை திரைப்படமாக இயக்குகிறார். இதில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளை பரிசீலித்தார். சமந்தா நடிக்க சம்மதித்திருந்தார். ஆனால் கதாபாத்திரத்துக்காக கூடுதல் வெயிட்போட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டதால் அதிலிருந்து விலகினார். அதன்பிறகு நித்யா மேனன் பரிசீலிக்கப் பட்டார...