என் திறமைக்கு ஏற்ற பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை கீர்த்தி பாண்டியன்
ஒரு சிலர் 'ஹீரோ' மற்றும் 'ஹீரோயின்' என்று பெயர் பெறுவதை விட, ஒரு சிறந்த நடிகர்/நடிகை என்ற பெயரை பெறவே விரும்புகிறார்கள். துல்லியமாக, இந்த முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், அவர்களது இலக்குகளை அடைவதற்கு நிறைய சவால்களை அந்த பயணத்தில் சந்திக்க வேண்டி இருக்கும், நிறைய விஷயங்களை இழக்க வேண்டி வரும்.
இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, "பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை" என்கிறார்.
கனா புகழ் தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் அந்த நடிகை வேறு யாருமல்ல, நன்கு அறியப்பட்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தால...
