சாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு தகுதியில்லை பழம்பெரும் நடிகை
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா கருத்து தெரிவித்திருந்தார்.
இது பற்றி கூறியுள்ள பழம் பெரும் நடிகை ஜமுனா, “சாவித்ரியுடன் நடித்தவர்களில் நான் மட்டும் தான் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் சாவித்ரி பற்றி கேட்காமல் படம் எடுத்து இருப்பது வேதனையாக இருக்கிறது. சாவித்ரி வேடத்துக்கு கீர்த்திசுரேஷ் பொருத்தமானவர் அல்ல” என்று குறை கூறி இருந்தார். படத்தை பார்க்காமல் மூத்த நடிகை குறை கூறியதால் கீர்த்திசுரேஷ் வருத்தம் அடைந்துள்ளாராம்...