ரஜினி வசனம் தலைப்பாக ‘ கெட்ட பையன் சார் இவன் ‘
பிரபலமான பாடல்களின் பல பல்லவிகள் பட்த் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகள் படப் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன. 'இது எப்படி இருக்கு', 'என் வழி தனி வழி' , 'கதம் கதம்' ,' போடா ஆண்டவனே நம்ம பக்கம் ' தலைப்புகளைத் தொடர்ந்து 'முள்ளும் மலரும்' படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய 'கெட்ட பையன் சார் இந்தக் காளி ' வசனமும் ' கெட்ட பையன் சார் இவன் ' என்கிற படப் பெயராகியுள்ளது.
'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் காந்தி பாபுவாக நம் மனதில் இடம் பிடித்த வித்தியாச நடிகர் நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன். யாரிந்த தீபக் சுந்தர் ராஜன்?.
' பயணங்கள் முடிவதில்லை' , 'வைதேகி காத்திருந்தாள்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'மெல்லத் திறந்தது கதவு', 'ராஜாதி ராஜா' போன்ற வெள...