Saturday, April 18
Shadow

Tag: #kettavanuperedutthanallavan #magath #aishwaryathattha

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’  சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்!

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்!

Latest News, Top Highlights
தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மகத்தான வளர்ச்சிக்குப் பின்னர், பொதுவெளிக்கு வரும் எந்த ஒரு பொருளும் மக்களிடையே மிகப்பெரிய விவாதத்துக்கு உள்ளாகிறது. தென்னிந்திய சினிமா துறையை உற்று நோக்கினால், தங்கள் விருப்பமான நடிகரின் எந்த ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் வெளியானாலும் அதை ரசிகர்கள் ஃபிரேமுக்கு ஃபிரேம் என்ன உள்ளது என பகுப்பாய்வு செய்து படத்தை பற்றிய தகவல்களை விவாதிக்கிறார்கள். சுவாரஸ்யமாக, இது இயக்குனர்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முக்கிய காரணியாக அமைகிறது. ஒரு சில நாட்களுக்கு முன், பிக் பாஸ் புகழ் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் "கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா" என்ற ரொமாண்டிக் காமெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் நடிகர் மஹத் தீவிரமான STR ரசிகராக நடித்திருக்கிறார். அந்த போஸ்டரில் சிம்புவின் கட் அவுட் இருந்தது....